தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சில வசனங்கள் & காட்சிகள்


நாயகன் அறிமுகம் 
4 தடியர்களை அடித்து விட்டு வரும் நாயகனிடம் சில பெரிசுகள் 
தம்பி உங்கள மாதிரி நாலு பேர் இருக்கறதினால தான் நாட்டுல மழை பெய்யுது 
நீங்க நல்லா இருக்கணும் 

நாயகி நாயகனிடம் 
( நாயகன் கக்கூஸ் கழுவும் வேலை செய்தால் கூட) நான் எத்தனேயோ ஆம்பளைங்கள பாத்துருக்கேன் ஆனா உங்கள மாதிரி ஒரு ஆள பாத்ததில்ல ..உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 

பாடல் காட்சி 
இருவரும் கூவத்தில் வசித்தாலும் பாடல் வருவது என்னமோ வெளிநாட்டில் தான்
அதுவும் தயாரிப்பாளர் வசதியாக இருந்தால் கண்டிப்பாக சுவிஸ் பிரான்ஸ் கனடா போன்ற நாட்டில் தான் 

வில்லன் அறிமுகம் 
ஏதோ நம்ம காரையே பாக்காத மாதிரி 20 வண்டில வந்து பில்ட் அப் கொடுபாநுங்க 

வில்லன் நாயகனிடம் 
தம்பி உன்ன பாத்தா 20 வருசத்துக்கு முன்னாடி என்னையே பாக்கற மாதிரி இருக்கு ... பேசாம என்கூட சேந்துடு தம்பி .

கிளைமாக்ஸ் 
ஊதினால் பறந்து விடும் அளவில் இருந்து கொண்டு 20 பேரை ஓட ஓட அடித்து விரட்டுவார் நம் நாயகன் .....
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு படம் பார்த்தேன் ( பழனி ) ... ஐயா இயக்குனரே இபொழுது தான் தமிழ் சினிமா சிறிது சிறிதாக துளிர்க்கிறது என்று நம்பிக்கை வந்தது ஆனால் உங்கள் படத்தை பார்த்தவுடன் சுத்தமாக போய்  விட்டது 

1 comment:

  1. பேரரசு தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர், அவர் படத்தை பற்றி நீங்கள் இப்படி பேசலாமா? :D

    ReplyDelete

tamil10