trail blazer

பஞ்சர் ஆகும் பன்ச் வசனங்கள் 

பன்ச் வசனம் , இது இல்லாத தமிழ் சினிமாவை விரல் விட்டு எண்ணி விடலாம் .
பிரபல நடிகர்கள் தம் படத்தில் போட்டியாளர்களை தாக்கி பன்ச் வசனம் பேசுவர் .அதில் இன்றைய தலை முறையில் குறிப்பிடத்தக்கவர்கள் அஜித் - விஜய் ஆவர்.

இருவரும் கிட்ட தட்ட ஒரே காலத்தில் நடிக்க வந்தாலும் இவர்களுக்குள் போட்டி என்று வந்தது 2001 ல் இருந்து தான் . 2001 ல் தீனா மற்றும் பிரண்ட்ஸ் திரைப்படங்கள் ஒன்றாக ரிலிஸ் ஆகின .அதில்ருந்தே அஜித் தல என்று அழைக்கப்பட்டார் .இந்த காலகட்டத்தில் அஜித்திற்கு ஏறுமுகமாகவும் விஜய்க்கு தோல்வி படங்களாகவும் அமைந்தன .அஜித் (தீனா , வில்லன் ,) விஜய் (வசீகரா , புதிய கீதை , பகவதி )  . 

இதில் முதல் முதலாக பன்ச் சண்டையை தனது புதிய கீதை படத்தில் ஆரம்பித்து வைத்தார் (அதில் வில்லனை பார்த்து எவண்டா உன் தல ? என்று கேட்பார் , இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் தல எனும் வார்த்தை அவ்வளவு பரிச்சயம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது ) அப்போது அஜித்திற்கு நேரம் நன்றாக அமைந்ததால் இதை பெரிதாக எடுக்க வில்லை . விளையாட்டு அத்துடன் முடியவில்லை இப்போது அஜித்திற்கு இறங்கு முகம் விஜய்க்கு ஏறுமுகம் 2003 ல்  திருமலை படத்தின் மூலம் சரிந்து போன தன் மதிப்பை  இரட்டை வெற்றிகளுடன் நிருபித்தார் .(விஜய் திருமலையில் வாழ்கை ஒரு வட்டம் டா அதில டோகறவன் ஜெய்பான் ஜெய்கறவன் தோப்பான் என்று ஒரு வசனம் பேசுவார் )

இது அஜித்தின் முறை அந்த வசனத்திற்கு ஜனா படத்தில் என் வாழ்க்கை வட்டமும் இல்லை சதுரமும் இல்லை நேர்கோடு எப்பவும்  ஜெய்ச்சு கிட்டே இருப்பேன் என்று பதிலடி கொடுப்பார் .கில்லியில் கபடி ஆடும் விஜயை அட்டகாசம் படத்தில் உங்க ஆட்டத்தை (கபடி ஆடும் வில்லன்களை பார்த்து )எல்லாம் பார்த்துட்டு தான் இருக்கேன் என்று கிண்டல் செய்வார் . இவ்வாறாக போய் கொண்டிருந்த இவர்கள் ஒரு வழியாக  ஆட்டத்தை நிறுத்தி இப்பொது பொது இடங்களில் ஒன்றாக சிரித்து போஸ் கொடுக்கும் அளவுக்கு நெருக்கம் ஆகி விட்டனர் . ஆனால் ரசிகர்கள் தான் இன்னும் அப்படியே  இருக்கின்றனர் .இவர்களை போலேவே பன்ச் பேசிகொண்டிருக்கும் சிம்பு - தனுஷை அடுத்த பதிவில் பார்க்கலாம் .சரி அப்டியே மேல ரைட் சைடு ல கிளிக் பண்ணிட்டு  போனா நல்லா இருக்கும் .  


தமிழரின் பதிவுலகம்

No comments:

Post a Comment

tamil10